From: Writing Caste <no-reply@wordpress.com>
Date: 2011/6/26
Subject: [New post] Why was Panchayat president Krishnaveni attacked?
To: afchittibabu@gmail.com
Why was Panchayat president Krishnaveni attacked? எருமை மாடு | June 26, 2011 at 9:18 am | Tags: affirmative action, தமிழ், government, panchayat president, representation, Tamil Nadu | Categories: Dalit Writing, Report | URL: http://wp.me/p1us7s-7g |
தாழையூத்து பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணவேணியின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, தலித் பஞ்சாயத் தலைவர்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளை முன்வைக்கும் வலைபதிவுகளின் முதல் பதிவு இது. இந்த சம்பவத்தைப் பற்றி அருந்ததியர் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கை கீழே.
In response to the brutal attack on Thalaiyuthu Panchayat President Krishnaveni, this is the first of a series of posts about attempts on the lives of dalit panchayat presidents. This attack has hospitalised an award-winning and popular elected leader and underlines the threat that caste poses to democracy. A statement on the attack issued by the Arunthathiyar Human Rights Federation has been reproduced in full and translated below.
நியாயமாக பணிசெய்த பஞ்சாயத்து தலைவரை அடித்து நொறுக்கிய கருங்காலிகள் யார்?
Who were the scoundrels who beat up a just and hard-working Panchayat president?
'தைரியம்ன்னா என்னான்னு தெரியுமா?' ஒரு செயலை செய்வதற்கு துணிந்து நின்று பயம் இல்லாமல் செய்வதைத்தான் தைரியம் என்று சொல்கிறோம். அந்த வகையில் சாதி வெறியாட்டம் மிகுந்த திருநெல்வேலி சீமையிலே தனி ஒரு மனிதனாக நின்று ஆங்கிலேயரை எதிர்த்து, முதல் சுதந்திரபோராட்ட தியாகத்தில் தைரியமாக போரிட்டவர் தளபதி ஒண்டிவீரன் என்பவரையேச் சாரும் அவர்களின் வழி வந்த எம்மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.
'Do you know what courage is?' To stand up boldly and to dare to do an act without fear, that is what we call courage. Such courage belonged to general Ondiveeran, the man who stood alone against the British and fought bravely in the first war of Independence. In Tirunelveli region, that stronghold of caste violence, our people who are of his lineage are being continually subject to atrocities.
இந்நாட்டு மக்களாகிய, அனைத்து தரப்பு மக்கள் எந்தவித நோய்கள் வராமல் இருக்க ஊரையும், தெருவையும், பெரிய பெரிய முதலாளிகளின் வீடுகள் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்து, அவர்கள் நன்றாக இருப்பதற்காக அனைத்து நோய்களையும் தாங்களே அனுபவிக்கிறார்கள். இந்தியாவின் 3வது அரசாங்கமான உள்ளாட்சி அரசாங்கத்தின் வழியாக தான், இழந்த அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் பஞ்சாயத்து தலைவர்களாக நின்று அந்த அதிகாரத்தின் வழியாக கிராம அளவில் முன்னேற்றம் அடையலாம் என நினைத்து இந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசியல் கோணத்தில் வெளிவருகிறார்கள் அருந்ததியர்கள். அவ்வாறு வெளிவந்த சமயத்தில் ஏற்பட்ட சம்பவங்களில் இழந்த உயிர்கள் தான் அதிகம்.
To save the people of this country from disease, they clean everything from the town, the streets and the houses of the big landlords. That these people may be healthy, they take all diseases upon themselves. Only in the past five years have the Arunthathiyar been standing for elections of panchayat presidents in the belief that atleast through the third arm of governance - the local bodies - they can find progress at the village-level, regain their lost rights and receive the subsidies that are their due. At this, the moment of their arrival, they have only lost many lives.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பஞ்சாயத்தில் தலித் தனி தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி(35 ) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த பஞ்சாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழும் சூழல் இருக்கிறது. இந்த பஞ்சாயத்தில் சங்கர் சிமென்ட் மற்றும் நிலவுடைமைகள் அதிகமாக இருப்பதனால் பஞ்சாயத்திற்கு வரவேண்டிய வரி வரவுகள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் கிராம அளவில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக தலித் மக்களின் முன்னேற்றம் மிகமிக குறைவாக இருக்கிறது. இந்த கிராமத்தின் வளர்ச்சியை நோக்கி இப்பஞ்சாயத்து தலைவர் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தக் கூடிய பல்வேறு கிராம முன்னேற்ற சம்பந்தமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பணிகளை செய்து வந்தார்.
Krishnaveni (35) of the Arunthathiyar community contested and won the Panchayat elections in the reserved Thalaiyuthu Panchayat of Tirunelveli district in 2006. There are people from many communities in this Panchayat. They mostly depend on agriculture for their livelihood. Since Sankar Cements and many large land-holdings exist in this Panchayat, there are many taxes that are due to be paid to it. Yet, progress at the village-level remains a question mark. Specifically, the progress among dalit people is very very low. For the development of this village, this Panchayat president participated in several programmes relating to village development, organised by governmental and non-governmental bodies, and performed her duties.
இவரின் சவாலான துணிச்சலும், தைரியமும் மற்றவர்களை வியப்படச் செய்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மாற்ற ஆதிக்க சமூகத்தினருக்கு அச்சத்தை உண்டாக்கியது. அதாவது, 'ஒரு சக்கிலிய பிள்ளை இப்படி துணிச்சலா செய்றா நம்மளைய அடக்கி ஆள நினைக்கிறா' என்ற தவறான சிந்தனைக்கு சென்று இப்பஞ்சாயத்து தலைவரின் பணியில் நெருக்கடி கொடுத்தான் மேலும் சில கொலை மிரட்டல்களும், கொலை முயற்சிகளும் அவ்வப்போது செய்து வந்தனர். இருப்பினும் பிற சமூகத்தை சார்ந்த பலர் 'இந்த கிருஷ்ணவேணி அம்மா வந்த பிறகு தான் நல்லநல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறது. இந்த அம்மா நேர்மையா இருக்கிறது' என்று கூறினார். இதையொட்டி இந்த பஞ்சாயத்து தலைவர் 'நான் பணி செய்யும் போது ஆதிக்கசாதியினர் ஒரு சிலர் பணிக்கு குறுக்கீடு செய்யுறாங்க, கொலை செஞ்சிடுவேனு மிரட்டுறாங்க' என இரண்டு முறை பாதுகாப்பு வேண்டி காவல்துறைக்கு மனு கொடுத்துள்ளார் ஆனால் காவல்துறை இதை பெரிய பொருட்டாக கருதவில்லை. இதற்கிடையில் கடந்த 11.06.2011 அன்று மாவட்ட ஆட்சிதலைவர் மன்றத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் இதற்கு மறுநாளான 12.06.2011 அன்று சமபந்தி கூட்டத்திலும் கலந்துகொண்டு பஞ்சாயத்துக்கு சம்பந்தப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த கூட்டத்திற்கு கிளார்க் மற்றும் துணை பஞ்சாயத்து தலைவர் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது.
People were stunned by her courage and bravery which were a challenge to them. While this feeling existed, dominant castes were also afraid of her. The wrong thought that 'This Sakkili woman acts with so much courage, she seeks to subdue and rule us' led to them posing obstacles to her work, besides issuing a few death threats and making attempts on her life. Yet, people from other communities said, 'After this Krishnaveni lady has come, many good things are happening. This lady is honest'. The Panchayat president had twice sought police protection, saying 'While I am doing my work, some members of the dominant castes are interfering and are threatening to kill me'. The police department did not take her seriously. On 11.06.2011, she participated in the grievance redressal meeting organised at the Collectorate. She participated in the meeting the next day to fulfill the resolutions relating to her Panchayat. It seems that both the clerk and the Panchayat vice-president did not attend this meeting.
இந்த நிலையில் 13.06.2011 அன்று வடக்கு தாழையூத்து பகுதியில் பஞ்சாயத்து சம்பந்தமான பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது இரவு நேரம் என்பதால் ஆட்டோவில் சென்று கொண்டிருக்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென 6 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடுமையாக தாக்கக்கூடிய ஆயுதங்களோடு வந்து பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணியை சரமாரியாக கை, கால், முகம் என பல்வேறு இடங்களில் வெட்டி காயப்படுத்தினர். இதனால் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க பாலைமேட்டுதிடல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரத்தம் அதிகமாக வெளியேறியதால் 1 லி 900 மிலி தேவைப்பட்டதால் தாழையூத்து பகுதியிலுள்ள பிற சமூகத்தைச் சார்ந்த 8 நபர்கள் தன்னுடைய இரத்தத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
On 13.06.2011, after having finished some Panchayat-related work in north Thalaiyuthu, she was returning home in an auto since it was nighttime. While crossing a sparsely populated stretch, six strangers attacked Panchayat president Krishnaveni with weapons intended to cause serious injury and hacked at her arms, legs, and face. She was admitted, battling for her life, to the Palaimettuthidal Government Hospital. Since she had lost a lot of blood, 1 l 900 ml of blood was needed. It is notable that eight individuals of other communities of the Thalaiyuthu region have donated blood for her.
இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்த வகையில் 'ஆயுதங்களோடு தாக்கிய 6 நபர்களில், 2 நபர்களை நாங்கள் சந்தேகப்படுகிறோம்' என கிருஷ்ணவேணி தரப்பில் கூறியதால் காவல்துறை அந்த இரண்டு நபர்களை கைது செய்தது. கைது செய்த 2 நபர்களை விசாரித்த வகையில் 'ஆயுதங்களோடு தாக்கியவர்கள் அந்த இரண்டு நபர்கள் அல்ல, அதை செய்தவர்கள் கூலி படைகள் தான் அதனால் நாங்கள் சீக்கிரமாக கண்டுபிடித்து விடுவோம்' என காவல்துறை கூறியுள்ளது. இச்சம்பவம் நடந்த 5 நாட்கள் கடந்த நிலையில் 19.06.2011 அன்று 5 நபர்கள் காவல்துறையிடம் சென்று 'நாங்கள் தான் கிருஷ்ணவேணியை கோலை முயற்சி செய்தோம்' என சரணடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவ விசாரணையானது 23.06.2011 நீதிமன்றத்திற்கு வருகிறது என கிருஷ்ணவேணியின் உறவினர்கள் கூறினார்கள்.
While inquiring about the incident, it was said on Krishnaveni's behalf that 'Of the six individuals who attacked with weapons, we suspect two people we know'. The police arrested these two. Following interrogations, they arrived at the conclusion that it was not these two but hired labourers who had attempted to murder her. They promised to find the culprits soon. Five days after the incident, on 19.06.2011, five individuals went to the police, confessed to the attack on Krishnaveni and surrendered. Krishnaveni's relatives said that the matter will come up for hearing in the court on 23.06.2011.
இந்த சம்பவத்தை செய்த கருங்காலிகள் யார்? என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய அருகிலுள்ள மாவட்டங்களைச் சார்ந்த அருந்ததிய இயக்கங்கள் ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் வழியாக கிருஷ்ணவேணியை தாக்கிய அந்த கருங்காலிகளை கைது செய்து தண்டனை வழங்குமாறு தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். வருகிற 28.06.2011 அன்று திருநெல்வேலியில் அனைத்து தலித் தலைவர்கள் இணைந்து 2000 மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என திருநெல்வேலி ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் திருமிகு சங்கர் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றிய முழு விபரங்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழு என்ற ஒரு குழுவை அமைத்து அந்த கிராமத்திற்கு சென்று உண்மை என்ன என்பதை கண்டறிய அதற்கான பணிகளை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற பரிந்துரையை சமிர்பிக்கின்றேன்.
Who were the scoundrels responsible for this incident? This remains an unresolved question. Arunthathiyar organisations from the districts of Tirunelveli, Virudunagar and Thoothukudi have organised protests to express their demand that the scoundrels who attacked Krishnaveni be brought to justice. The Adithamizhar Peravai district secretary Sankar has announced that dalit leaders will come together to lead a 2000-strong protest on 28.06.2011 in Tirunelveli. I submit the recommendation that a fact finding team should be constituted and sent to the village to determine the truth.
>அரசானது திருமதி கிருஷ்ணவேணியை தாக்கிய கருங்காலிகளை உடனே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
>திருமதி கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கும் உற்றார் உறவினர்க்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
>பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணியின் குடும்பத்திற்கு உடனே நிவாரண நிதியுதவி செய்ய வேண்டும்;
>தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
>வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூறியுள்ள தலித் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி துப்பாக்கி கொடுப்பதை நடைமுறை படுத்த வேண்டும்.
>ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான 29 அதிகாரங்களை நடைமுறைபடுத்தவேண்டும்.
அறிக்கைதொகுப்பு
வ. முத்து
மாநில ஒருங்கிணைப்பாளர்
அருந்ததியர் மனித உரிமை சங்கம்
>The government must immediately arrest the scoundrels who attacked Krishnaveni under the Prevention of Atrocities Act.
>Mrs. Krishnaveni's family and relatives must be provided with security.
>The regions where Dalit people live must be provided with security.
>For the security of dalit Panchayat leaders as mentioned in the Prevention of Atrocities Act, it should be made a practice to provide them with guns.
>The 29 powers and responsibilities that rest with the Panchayat President should be brought into practice.
Statement compiled by
V. Muthu
State Convenor
Arunthathiyar Human Rights Federation
WordPress.com | Thanks for flying with WordPress! |
Trouble clicking? Copy and paste this URL into your browser: http://subscribe.wordpress.com
INFORMATION OVERLOAD?
Get all ZESTCaste mails sent out in a span of 24 hours in a single mail. Subscribe to the daily digest version by sending a blank mail to ZESTMedia-digest@yahoogroups.com, OR, if you have a Yahoo! Id, change your settings at http://groups.yahoo.com/group/ZESTMedia/join/
PARTICIPATE:-
On this list you can share caste news, discuss caste issues and network with like-minded anti-caste people from across India and the world. Just write to zestcaste@yahoogroups.com
TELL FRIENDS TO SIGN UP:-
If you got this mail as a forward, subscribe to ZESTCaste by sending a blank mail to ZESTCaste-subscribe@yahoogroups.com OR, if you have a Yahoo! ID, by visiting http://groups.yahoo.com/group/ZESTCaste/join/
Also have a look at our sister list, ZESTMedia: http://groups.yahoo.com/group/ZESTMedia/
No comments:
Post a Comment